Sunday, November 14, 2010

மீண்டும் காதல்..........

செப்படி வித்தை தெரிந்தவள் போல நீ
தலையாட்டி பொம்மை போலவே வாழ்கிறேன் நான்
எத்தனை முறை அறுந்தாலும், கயறு தரும்
பட்டம் நான், என்னை நீ சுழற்ற
என் காலனி குழந்தைகளை என்ன செய்தாய் நீ
என்னை பார்க்கும் போதெல்லாம் உன்னை தேடுகிறார்கள்
மாபெரும் இரைச்சல், நீ பேசாத மௌன நேரங்களில்
சீக்கிரம் வந்துவிடு, வேலை செல்லும் அன்னையை தேடும்
குழந்தையாய் போனேன் நான்
உன் கையில் இறுக்கும் என் காதல் திண்பண்டதிற்காக......

Monday, April 12, 2010

பிரிவினை வாதத்திற்காக .......

யாரோ சொன்னார்கள்
இவர்கள் இல்லை அவர்கள் என்று
இவர்களும் சொன்னார்கள்
நாங்கள் இல்லை அவர்கள் என்று
யார்தான் சொல்வது
நாம் எல்லோரும் ஒன்று தான் என்று !
நேர்முக தேர்வில் கேட்டார்கள்
என் பலமும் பலவீனமும் எது என்று
எப்படி சொல்வேன் அது நீ என்று ?

அறுசுவையும் அடைந்து கிடக்கும்
அஞ்சரை பெட்டி நீ,எப்போதும்
காரம் மட்டும் கொஞ்சம் தூக்கல் தான்

வாழ்க்கை சதுரங்கத்தில் எந்த
பக்கம் நீ , சத்தியமாக எப்போதும்
நான் உன் பக்கம்

20 விரல்களின் கதகதப்பு வேண்டும்
எப்போதும் வாழ்கையில்,
உன்னுடன் , என்னுடன் நம்முடன்................

Tuesday, March 30, 2010

என்ன காதலடா இது
மனிதனை பாடப்படுத்துகிறதே
ஆயிரம் கோடி மரண கீற்றுகளின் பொட்டலம்
அவிழ்த்து பார்க்கும் அனைவருக்கும்
அறுக்கும் வலி தான் மிச்சம்
தெளியவிட்டு கலங்கடிக்கும் போதை
தெளிவில்லாமல் நகரும் வாழ்க்கை பாதை
எத்தனை இரவுகளில் நரகம்
மட்டுமே எனக்கு துணை
புரியாமல் புலம்பவிட்டு, பித்தன்
என்ற பெயரும் தருகிறது இலவசமாக
யாருக்கும் வேண்டாம் இந்த விதியின்
வன்மம், காதல் என்ற பெயரால்.......

Monday, March 15, 2010

தொடக்கம் (எ) முயற்சி

தொடக்கம் (எ) முயற்சி

வெற்றியின் வாசல் எந்த பக்கம்
விடை தெரியா கேள்வியின் விடை
முயற்சியில் மட்டுமே!
எல்லா கோணல்களுக்கும் தொடக்கமுண்டு
எல்லா தொடக்கமும் கோணல்கள் அல்ல
விழுந்து கிடக்கும் விதையின்
முயற்சி, விஸ்வருபம் கொண்ட மரமாக.
நாமும் முயற்சிப்போம் இன்றே
தொட்டு விடும் தூரம் தான்
அந்த வானம் என்றே !

Tuesday, February 23, 2010

எனது இன்றைய கவிதை

என்னவளே
நான் இருக்கிறேன் உனக்காக
இங்கு வந்துவிடு

என் மார்பில் சரிந்து விழும் போதெலாம்
வெட்கைஎனும் பாதுகாப்பு தர
தந்தையாக நான் இங்கு

பிரசவகால பிணக்குகளில் எல்லவற்றையும்
துறந்து உனக்கு பணி செய்ய
தாயாக நான் இங்கு

கேலி பேச்சுக்கும் ஒரு போர்வை
தூக்கத்தை பகிர்ந்து கொள்ள
சகோதரியாக நான் இங்கு

அர்த்தமற்ற சண்டைகளின்
விளைவான ஊடல் காலத்தில்
சகோதரனாக நான் இங்கு

எத்தனை முறை நீ விழுந்தும்
தோள் கொண்டு தாங்கும்
தோழனாக நான் இங்கு

உலக பொது மொழியாம்
அன்பை காதலாக்கி காலமெல்லாம்
நான் இருக்கிறேன் உனக்காக
இங்கு வந்துவிடு
என்னவளே !!!

Tuesday, February 16, 2010

இளமை இதோ இதோ

நசுக்கப்பட்ட பூக்கள், எரி நட்சத்திரம்
செதுக்கப்பட்டத சிற்பம் , தனிமை படுத்தப்பட்ட கும்பல்
கேளிக்கை சித்ரவதை,
நவரசம் ததும்பும் தலையாட்டி பொம்மை
நங்கள் யார் ? புரியாமல் தவிக்கும்
எதிர்கால இந்திய தூண்கள்........................

Thursday, February 11, 2010

காதல் தேடல்...........



தேடி கொண்டிருக்கிறேன்
என் காதலியை இல்லை
காதலை
உலகத்தின் அற்புதங்கள்
அத்தனையிலும் உன் சாரல்
சுகந்தமாக ,சில சமயம் சோகமாக
அர்த்தமுள்ள காதலனும் இல்லை
காதலியும் இல்லை,
காதலாவது இருக்கும் என்ற
நம்பிக்கையில் தேடிகொண்டிருகிறேன் ......
என் காதலியை அல்ல
காதலை...................

Monday, February 1, 2010

இது வரை நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு - 1

* பெண்களின் மனம் பெண்னுக்கு தான் தெரயுமம் " உன் மருமகளும் ஒரு பெண் தானே" .

* " அழுது கொண்டு இருக்கிறேன், நான் பிறந்தவுடன் இறந்த என் ஒரு நிமிட தாயிற்காக......... "

* எனக்காக நான் உருவாகிய சுதந்திர கூண்டு

என் தனிமை ............

திருநங்கைகள்
" நாங்கள் என்ன 33% கேட்டோம்
1% தானே உங்கள் அன்பை மட்டும் "

* நான் மட்டும் அழுகிறேன்

யாரும் கேட்க கூடாது என்றா இல்லை
கேட்பதற்கு யாரும் இல்லை என்றா
தனிமையில்.........


இது நேற்று இரவு நான் எழுதிய கவிதை
" அழகான வனம்
மேகம் மூடிய நிலவு
சில்லென்ற காற்று
சிங்கார சூழ்நிலை
ஆனால் மழை மட்டும் வேண்டாம் என்றது மனது
நான் பார்த்த அந்த " நடைபாதை சிறுவனுக்காக".

* முன்கூட்டியே கிழித்தேன் நாட்காட்டியின் தேதியை

"என் இன்றைய அவமானங்களையும் சேர்த்து.......


இறந்து போன ஏன் தந்தைக்கு சமர்ப்பணம்

இரவுகளில் அர்த்தமற்று அழும்போதெல்லாம்
என்னை அணைத்து கொண்டாய்,
உன் நிழலில் நிற்கும் போது தெரியவில்லை
வெய்யிலில் நீ உலர்கிறாய் என்று
என் அர்த்தமற்ற கோபங்களால் சுருங்கியது
உன் முகம்மட்டும் அல்ல, எனக்காக நீ வாங்கிய ரணங்களும் தான்
அப்பா, இன்றும் நிற்கிறேன் நிழலில்
நீ வளர்த்த மரத்தின் அடியில், உன் நினைவுகளோடு மட்டும்...................

* நீரின்றி எரிந்து விடும் வெண் பாஸ்பரஸ்

நானும் தான் உன் நினைவுகள் இன்றி..........


அம்மா, உன்னை பற்றி கவிதை சொல்ல சொன்னார்கள்
எவ்வளவு முயன்றும் முடியவில்லை
கண்களில் மட்டும் நீர்...........

காதல், இந்த தோட்டத்தில் விளையும் பூக்களில்
வாசனை இல்லை, வலிகள் மட்டுமே............

பீனிக்ஸ் பயணம்
எல்லோர் மீதும் கோபம் எனக்கு
முடிவு தெரிந்த இந்த பயணத்தில் ஏன்
எல்லோரும் முனங்கி கொண்டிருக்கின்றார்கள் என்று.
எத்தனை விதமான ஜன்னல்கள், மூடர்களே
வானம் ஒன்று தான் என்று சொல்ல வேண்டும் எனக்கு
ஒவ்வொரு நாளும் நம்பிக்கையும் வெளிச்சத்துடன் தொடங்கும்
எனக்கு, ஆனால் முடிவு இருளிலும் , நிழலுடன் மட்டுமே.
ஆனால் மீண்டும் வருவேன்
எழுந்து நடக்க தொடங்கும் குழந்தை போல
அழுகையும், அனுபவமும் கொண்டு..............

முழுமை
100% இதில் எனக்கு உடன்பாடு இல்லை
கடவுளால் கூட முடியவில்லையே
பிழைகளுடன் மனிதர்கள்.........

என மனைவியின் கண்ணிரின் விலை மட்டும்
தெரியவில்லை
credit card தேயும் போதெல்லாம் - அப்பாவி கணவன்

கருவறையின் நிறம் தெரியவில்லை
கல்லறைக்குள்ளும் நிறம் தெரியவில்லை
முடிவு தெரிந்த இந்த பயணத்தில்
எத்தனை நிறங்கள் மனிதர்களில் மட்டும்............

துன்பத்தின் ரகசியம் மட்டும் யாருக்கும்
புரிவதும் இல்லை, விரும்புவதும் இல்லை
வலிகளுடன் கற்றுகொள்வதால்................

பசி
இந்த அவமானம் மட்டும் எல்லோர்க்கும் உண்டு
சில சமயம் நிரந்தரமாக
சில சமயம் விரதமாக மட்டும்........

அகிம்சையை கையில் எடுத்தார் காந்தி
பைத்தியகாரத்தனம் என்று நினைத்தேன்,
ஆனால் என தவறுகளுக்கு "மன்னிப்பை"
தண்டனையாக பெறும்வரை.

என் அத்தனை தவறுகளுக்கும்
நீ கொடுத்த ஒற்றை தண்டனை - மன்னிப்பு
ஆதலால் தான் வலிக்கிறது...

நீ மட்டும் போதும் என்றேன், என்னை நீ விலகும்வரை
இப்போதும் சொல்கிறேன், உன் நினைவுகள் மட்டும் போதும்
நான் வாழும் வரை..............

காத்திரு, சொல்லிவிட்டு சென்று விட்டாய்
எப்போது வருவாய் என்று
நீஉம் சொல்லவில்லை நானும் கேட்கவில்லை.
ஆனாலும் காத்திருக்கிறேன்
தனிமையில் உன் நினைவுகளின் துணை கொண்டு............

ஓர் உடல் இருயிர் என்றேன்,இல்லை என்றாய்
நகமும் சதையும் போல என்றேன்,இல்லை என்றாய்
பிறகு
"நீ நீயாக இருப்பதும், நான் நானாக இருப்பதும் தான் காதல் என்றாய்.

"புணர்தலில் இல்லை காதல், புரிந்து கொள்வதில் தான்"
புரிந்து கொண்டேன் உன்னையும் நம் காதலையும்......

காதலின் வெளிப்பாடு கண்ணிர்
உணர்ச்சிகளின் வெளிப்பாடு கவிதைகள்
புரிந்து கொள்ளாத இந்த கேளிக்கை உலகத்திற்கு
நாமெல்லாம் பொமைகள், எல்லாமே விளையாட்டு...........

என்னிடம் பிறக்கும் அத்தனை வாக்கியத்தின்
முடிவிலும் நீ தான் இருக்கிறாய்
முற்றுபுள்ளியாக...............
....

நண்பா,
இருவரும் வேறு வேறு திசையில்
காலம் நமக்கு வலிக்க வலிக்க கற்று கொடுத்த
முடிவு மட்டும் ஒன்றுதான்.
நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றேனும்
ஒருநாள் உன்னை கட்டியனைத்து
காதில் கிசுகிசுபேன்
" வா காலத்தை வெல்ல மீண்டும் சந்திப்போம்" என்று......


காதலும் ஒரு புதிர் தான்
இதன் விடை, அழுகையும் சந்தோஷமும்
எப்பொழுது கிடைக்கும் என்று
எதிர்பார்க்க முடியாததால்...........

மழை

கடலில் கால் நனைக்கும் போதெல்லாம்
தோன்றுகிறது
எப்பொழுதோ தவறவிட்ட
பள்ளி பொழுது மழை காலம்.........

எல்லா வார்த்தைகளிலும் உன்னை தான்
காண்கிறேன்
வார்த்தையின் முடிவில் வரும் இடைவெளி மௌனத்தில்............

நான் படித்த அத்தனை கவிதைகளும்
உணர்த்தியது ஒன்றுதான்
நிதர்சனத்தை தொலைத்துவிட்ட
நிழல் மனிதர்களின் புலம்பல்கள் அவை......

காற்றுக்கு வேலிபோட்டு , தீயை குளிப்பாட்டி
நிலவை சிறைவைத்து, சூரியனுக்கு சுளுகேடுக்கும்
வேடிக்கை மனிதர்கள் நாம்.

யதார்த்தத்தை தொலைத்துவிட்ட
கற்பனை அரசனின் அரசைவை இது
இங்கு விதிகளும் கிடையாது, விலக்கும் கிடையாது
யாவரும் அரசர் தான், "அரசால மக்கள் இல்லாமல்".

நாம் நாமாக இருக்கும் பொழுது தான்
நம்மை நாம் உணர்கிறோம்....
நம்மை நாம் இழக்கும் பொழுது
நமக்கான நாமத்தையும் இழக்கிறோம்
உண்மையை உணர்ந்தால் தோன்றுவது ஒன்று தான
நிரந்தரமாக தோன்றுவது நிதர்சனமில்லை
நிதர்சனத்தை புரிந்து கொள்ள நாம்
விரும்புவதும் இல்லை............

மனித வாழ்வு தீட்டபடாத சித்திரம்
வரையும் முன் ஆயிரம் ஆயிரம்
கற்பனையின் வண்ணங்கள், முடிவு
சிலருக்கு பொருட்காட்சியாக, சிலருக்கு பொக்கிஷமாக...........

கோவணத்தை காணவில்லை
தேடிப்பாக்க மனமும் இல்லை
அம்மணத்துடன் வாழ்கிறேன்
- மனிதநேயம்


நீயும் நானும் தனிமையில்
நாம் சந்திக்கும் அந்த 20 நிமிடத்தில்

உன் மீது கோபம் கொள்கிறேன்
நீ தந்த தனிமை சுவைக்கு தண்டனையாக

உன் மீது ஆசை கொள்கிறேன்
நீ தந்த கனவுகளின் வாசல்களாக

உன் மீது கருணை கொள்கிறேன்
எனக்காக நீ பட்ட வலிகளுக்கு மருந்தாக

உன் மீது பெருமை கொள்கிறேன்
நீ தந்த அரவணைப்பின் அடையாளமாக

உன் மீது சந்தேகம் கொள்கிறேன்
நீ தந்த இந்த இடைவெளி பேதத்தால்

ஆனாலும்

மீண்டும் மீண்டும் காதல் கொள்கிறேன்
நீயும் நானும் தனிமையில்
நாம் சந்திக்கும் அந்த 20 நிமிடத்தில்

நம்மையே மறந்து நாம்
உச்சரிக்கும் ஒரு அழகான
கவிதை " அம்மா "
எத்தனை கவிதை எழுதிவிட்டேன்
பெருமிதம் எனக்கு, போடா பைத்தியம்
என நீ என் தலைதொட்டு கொஞ்சுவதை
மட்டும் எழுத முடியவில்லை.
பிரசவம் தான் மிதமிஞ்சிய வலியாம்
எனக்கு உயிர் கொடுக்க வலிபெற்ற
நீஉம் சிவன் தான் , தாயும்மனவான்
என பெயர் கொடுக்க
வரம் கொடம்மா என்னை சுமந்த
கருவறையை நான் சுமக்க, உனக்காக
அடுத்த ஜென்மத்தில் " தாயாக" ......


அவித்த முட்டைக்கு தெரியாது
அருகில் இருப்பது தன்
அன்னை என்று அசைவ உணவகத்தில்.


தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்
கனவுகளிலும் உன் தொல்லை

உன்னோடு சண்டை இட்ட பொழுதே
செத்துவிட்டேன், பிறகேதர்க்கு
சமாதான தூதுவனை என் கல்லறைக்கு
அனுப்புகிறாய் உன் புன்னகையால்

பேசிவிடுவோம் என்று வரும்
அத்தனை நாட்களிலும் மௌனம்
மட்டுமே பரிசு, நம் காதலுக்கு.

சீக்கிரம் கலைத்துவிடு, உன் மௌன
சத்யக்ராகத்தை நான் புரிந்துகொண்டு
புலம்புகிறேன் இங்கு.........................



மழை காலத்து பின்னிரவு
ரயில் பயணத்தின் தேனீர்
கோடை கால குட்டை தண்ணிர்
சொல்லி கொண்டே போகலாம்
சின்ன சந்தோசங்களை
நம் நட்பை போல.............


பிறந்தவுடன் இறந்தாலும் தாயன்பை
உணர்த்தும் தாயின் ஸ்பரிசம்
உணர்கிறேன் மீண்டும் உங்களுடன்
நட்பின் பெயரால்........


என்னை பொறுத்தவரை நீ விகடகவி
அகமும் புறமும் ஒரே மொழி
சீதை குளித்த நெருப்பின் மிச்சம்
நட்பின் துளியாய் நீ .........

இந்த மாயா உலகத்தில் எத்தனை மயக்கங்கள்
விடுபடும் முன்னரே விஸ்வரூபம் எடுக்க
துடிக்கும் விட்டில் பூச்சிகள் நாம்

கோமாளிகளை வேடிக்கை பார்க்க கூடும்
கோமாளி கூட்டங்கள்

காற்றாடி விட்ட காலத்தை
விமானத்தில் தேடும் அறிவாளிகள்

எதையோ யோசிக்க எல்லாவற்றையும்
இழக்கும் அபாக்கியசாலிகள்

விதி முடியும் முன்னரே கதை முடியும்
விடை தெரியாமலே நம் வாழ்கையில்
இந்த கிறுக்கல் கவிதை போல...........................

முதுமை
கிறுக்கல் கவிதைகளின் சுகம்
சுகந்தம் தான், பேச
யாருமற்ற முதியோர் இல்லம் போல.
காலத்தின் நினைவு சின்னங்கள்,
சிதிலத்துடன் மட்டும்.....